148. அருள்மிகு தேவபுரீஸ்வரர் கோயில்
இறைவன் தேவபுரீஸ்வரர்
இறைவி மதுர பாஷணியம்மை
தீர்த்தம் தேவ தீர்த்தம்
தல விருட்சம் வாழை மரம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருத்தேவூர், தமிழ்நாடு
வழிகாட்டி நாகப்பட்டினத்தில் இருந்து எரவாஞ்சேரி சென்று கச்சனம்-கீவளூர் சாலையில் சென்றால் சுமார் 17 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. நாகப்பட்டினத்தை அடுத்துள்ள கீழ்வேளூர் இரயில் நிலையத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Thiruthevur Gopuramதேவகுருவான பிரகஸ்பதி இத்தலத்திற்கு வந்து வழிபட்டதால் 'தேவூர்' என்று அழைக்கப்படுகிறது. தேவர்கள் வந்து வழிபட்டதால் மூலவர் 'தேவபுரீஸ்வரர்' அழைக்கப்படுகிறார்.

மூலவர் 'தேவபுரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாள் 'மதுர பாஷிணியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

Thiruthevur Amman Thiruthevur Moolavarகோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் பால கணபதி, பாலமுருகன், இந்திர லிங்கம், கவுதம லிங்கம், ஆத்மலிங்கம், நடராஜர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

குபேரன் இத்தலத்து இறைவனை வழிபட்டு சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான்

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று இக்கோயில்.

பிரகஸ்பதி, இந்திரன், குபேரன், சூரியன், கௌதம முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com